மயிலாடுதுறை நகரில் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாததால் சாலையில் குப்பைகள் சிதறிக்கிடக்கிறது. தரங்கம்பாடி சாலை, பூம்புகார் சாலை உள்ளிட்ட பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. இந்த பகுதியில் குடியிருப்புகள் இருப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மயிலாடுதுறை.