தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அம்பேத்கர் சிலை கூட்ரோடு பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து பென்னாகரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை வாங்குகின்றனர். இந்த குப்பைகளை சாலையோரம் உள்ள குப்பைதொட்டியில் போட்டு குப்பை தொட்டியோடு சேர்த்து சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் குப்பை தொட்டியும் சேர்ந்து எரிந்து சேதமடைகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அந்த வழியாக செல்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குப்பைகளை எரிக்காமல் எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ், தர்மபுரி.