கோவை அரசு ஆஸ்பத்திரி அருகே சிக்னல் உள்ளது. இந்த சிக்னல் அருகே உள்ள கால்வாயை மூடி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நடைபாதையில் மிகப்பெரிய குழி காணப்படுகிறது. இதனால் நடைபாதையில் செல்லும் பாதசாரிகள் குழிக்குள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன் நடைபாதையில் உள்ள குழியை மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்.