திருப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் எந்த நேரமும் போக்குவரத்து இருக்கும். அதிலும் அவினாசிசாலை, ஊத்துக்குளி சாலை, மங்கலம் சாலை, தாராபுரம் சாலை, பல்லடம் சாலை, காங்கயம் சாலைகளில் வாகன நெருக்கடி அதிகமாக காணப்படும். இந்த நிலையில் வளர்மதி பஸ் நிறுத்தம் அருகே சாலையின் நடுவே குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே அந்த குப்பை தொட்டியை அகற்றி வேறு பகுதியில் வைக்க வேண்டும்.