கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி வருகின்றன. இவை எப்போதும் கூட்டம் கூட்டமாகவே சுற்றுவதால் சாலையில் செல்லும் பொழுது முதியோர், சிறியவர்களை நாய்கள் துரத்துகின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகின்றனர். இந்த தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.