திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டி பஸ்நிலையம் அருகே, கொல்கத்தா செல்லும் ஜி.என்.டி. சாலையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மழைநீர் வடிகால்வாய்களின் மூடிகள் சரியாக மூடப்படாமல் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு மிகவும் ஆபத்தாக உள்ளது. இந்த வழியாக மேய்ச்சலுக்கு வரும் மாடுகள், தவறி அந்த குழிகளுக்குள் விழுவதும் அவைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க முன்னேற்பாட்டு நடவடிக்கையாக மழைநீர் வடிகால்வாய்களின் மூடிகளை மாற்றவேண்டும்.