புகார் எதிரொலி

Update: 2025-12-14 07:59 GMT


திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சியில் உள்ள ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு அரசு சார்பில் கொடுக்கப்படும் தொகை வழங்குவதில் தொய்வு ஏற்பட்டிருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அரசு சார்பில் வழங்கப்படும் தொகையை துரிதமாக வழங்கினர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்