அரியலூர் பழைய அரசு மருத்துவமனைக்கு பிரசவ சிகிச்சைக்காக தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள், அவர்களது உறவினர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் ஏராளமான தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. இவை சிகிச்சைக்காக வந்து செல்பவர்களையும், பொதுமக்களையும் கடிக்கப்பாய்கின்றன. மேலும் அவர்களை அச்சுறுத்துகின்றன. இதனால் பெண்கள் பயத்துடனேயே செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.