அரியலூர் மாவட்டம் தேளூர் கிராமத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் இருந்து பல ஊர்களுக்கு மாணவ-மாணவிகளும், வேலை நிமித்தமாக பொதுமக்களும் தினமும் சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்த கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை இந்த வழியாக செல்லும் பொதுமக்களையும், மாணவ-மாணவிகளையும் அச்சுறுத்துகின்றன. இதனால் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படும் சூழல் நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதிகரித்து வரும் தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.