நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள், முதியோர்கள் வீட்டை வீட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். மேலும் தெருநாய்கள் துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகளை சிலர் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு எப்போதுதான் தீர்வு கிடைக்குமோ? என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
-பொதுமக்கள், நாமக்கல்.