திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தாலுகா, திருமழிசை பேரூராட்சியில் ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்கு கர்ப்பிணி பெண்களுக்கு அரசு சார்பில் கொடுக்கப்படும் தொகை வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவ அதிகாரிகளிடம் கேட்கும்போது அலட்சியமாக பதில் அளிக்கிறார்கள். மேலும் மருத்துவ பணியாளர்கள் சரியான நேரத்திற்கும் வருவதுமில்லை. இதனால் நோயாளிகளும் கடும் அவதியடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் பொதுமக்களின் குறைகள் சரிசெய்யப்பட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.