சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்திலிருந்து, மெப்ஸ் பஸ் நிறுத்தம் செல்வதற்காக நகரும் படிகட்டுகளை பொதுமக்கள் பயன்படுத்தினர். ஆனால் வெகுநாட்களாக அவைகள் செயல்படாமல் காட்சிபொருளாகவே இருப்பதால், பொதுமக்கள் ஆபத்தான வகையில் சாலையை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக வயது முதிர்ந்தவர்களால் படிகட்டுகளில் ஏறி, இறங்க சிரமமாக உள்ளது. எனவே செயல்படாமல் இருக்கும் நகரும் படிகட்டுகளை சரிசெய்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.