கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி நகர் பகுதி, நாச்சிகுப்பம் கூட்டுரோடு பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. கூட்டம் கூட்டமாக சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளுகம் ஏற்படுகின்றன. மேலும் குழந்தைகளை துரத்தி கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், வேப்பனப்பள்ளி.