பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்

Update: 2025-11-02 10:55 GMT

அரியலூர்-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அம்மாக்குளம் பிரிவு சாலை அருகே தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் இந்த தெருநாய்கள் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளையும், நடந்து செல்வோரையும் கடிக்க பாய்கின்றன. இதனால் குழந்தைகள், பெண்கள் உள்பட அனைத்து மக்களுக்கும் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்