புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கீரமங்கலம் தெற்கு நெய்வத்தலி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் வழியில் சாலையில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.