புதுக்கோட்டை மாநகராட்சி 38-வது வார்டு பாரதி நகரில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அப்பகுதியில் விளையாடும் குழந்தைகளை விரட்டி கடிக்க பாய்கிறது. இதனால் பெற்றோர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் மாடுகள், குரங்குகள் தொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.