புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி 27-வது வார்டு தென்றல் நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகனங்களை துரத்துவதால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் விளையாடும் குழந்தைகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.