திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று திடீரென சண்டையிட்டுக் கொண்டு சாலையின் குறுக்கே ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் தெருநாய்கள் இப்பகுதியில் விளையாடும் சிறுவர், சிறுமிகளை கடித்து குதறுகின்றன. இதுவரை இந்த வழியாக சென்ற மூன்று பேரை தெருநாய்கள் கடித்துள்ளன. இதனால் இந்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நடமாட பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.