தெருநாய்கள் அட்டகாசம்

Update: 2025-10-12 12:18 GMT

கரூர் மாவட்டம் வெங்கமேடு முனியப்பன் கோவில் தெரு, என்.எஸ்.கே. நகர், வாங்கப்பாளையம், தங்க நகர், காந்தி நகர் ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அவ்வழியாக செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளை துரத்தி கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் கோழி உள்ளிட்ட கால்நடைகளை கூட்டமாக வந்து வேட்டையாடி செல்கின்னறன. எனவே அட்டகாசம் செய்யும் தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்