அரியலூர் மாவட்டம் காத்தான் குடிக்காடு கிராமத்தில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரிவு சாலை அருகே கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்களால் மாணவ-மாணவிகளும், வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.