புகார் எதிரொலி

Update: 2025-09-28 09:58 GMT

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய்கள் செடி,கொடிகளால் நிறைந்து புதர்மண்டி காணப்பட்டது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் அங்கிருந்த செடி, கொடிகளை உடனடியாக அங்கிருந்து அகற்றினார்கள். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்