அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக ரவுண்டானா அருகே அதிகளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக செல்லும் வாகனங்களின் குறுக்கே சென்று விழுவதால் வாகன ஓட்டிகள் அதிகளவில் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், வாகன ஓட்டிகள் பலரும் நிலைதடுமாறி கீழே விழும் அபாயமும், விபத்து ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளது. ஏற்கனவே இந்த பகுதியில் சிலமுறை விபத்து ஏற்பட்டு பலரும் காயமடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.