தெருநாய்கள் தொல்லை

Update: 2025-09-14 13:36 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தோப்புக்கொல்லை, கேப்பரை, இந்திரா நகர், மேட்டுப்பட்டி , கைக்குறிச்சி, பூவரசகுடி, வல்லத்திராக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், குழந்தைகளை துரத்தி கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் பெரும் அச்சத்துடனேயே வெளியில் சென்று வருகின்றனர். எனவே இப்பகுதியில் தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்