சேலம் தென் அழகாபுரம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளன. இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் வெளியே வர அச்சப்படுகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்களை துரத்தி வருகின்றன. அப்போது வாகன ஓட்டிகள் தவறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். இது குறித்து பலமுறை மனு அளித்தும் பலனில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய் தொல்ைலயை கட்டுப்படுத்த வேண்டும்.
-பொதுமக்கள், தென் அழகாபுரம்.