திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள அழிஞ்சிவாக்கத்தில் சாலைகள் குண்டும், குழியுமாக சிதிலமடைந்து கிடக்கிறது. தண்ணீர் தேங்கும் சமயத்தில் சாலையில் பள்ளம் எங்கு கிடக்கிறது என்பதை யூகிக்கமுடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட அந்த இடத்தை கடந்து செல்ல கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த சாலையை சீரமைத்து தரவேண்டும்.