சென்னை பல்லாவரம் கண்டோன்மென்ட் பூங்காவில் மின்சார பெட்டி ஒன்று திறந்தநிலையில் ஆபத்தாக உள்ளது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் கடந்த வாரம் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக மின்சார பெட்டியை சீரமைத்து சரிசெய்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.