சென்னை மயிலாப்பூர் துலுக்காணம் தோட்டம் தெரு உள்ளது. இங்கு தெருவின் பெயர்பலகை அருகில் உள்ள மின்பெட்டி சேதமடைந்து மின் வயர்கள் வெளியே தெரியும்படியாக மிகவும் ஆபத்தான வகையில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் உயிர்சேதம் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்பெட்டியை சீரமைத்து தரவேண்டி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.