சென்னை மாதவரத்தில் உள்ள ஏ.வி.எம் நகரில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மின்மாற்றி மிகவும் ஆபத்தான முறையில் உள்ளது. மேலும் அதிலிருந்த தீப்பொறி வருகிறது. இங்கு குழந்தைகள், முதியர்வகள் அதிகமாக உள்ளதால் அச்சத்துடனே கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உயிர் சேதம் ஏற்படும் அபாயநிலை உள்ளது. மாநகராட்சி துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின்மாற்றி சரிசெய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.