திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம், ஒரத்தூர் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் சேதமடைந்தும், சுற்று சுவற்றில் செடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. அதன் சுவர்களில் விரிசல் விழுந்து இடிந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த சுவர்களை மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.