திருச்சி மாவட்டம் கிராப்பட்டி அன்பு நகரில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றி திரிகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று சண்டை இட்டுக்கொண்டு திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை தெருநாய்கள் கடிக்க துரத்துகின்றன. இதனால் அவர்கள் பயத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. மேலும் தெருநாய்களால் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.