சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் இந்திராகாந்தி சிலை அருகில் உள்ள டாஸ்மாக் கடையால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகுகிறார்கள். மதுபோதையில் நடக்கும் சண்டைகள் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்களை வெகுவாக பாதிக்கிறது. மேலும் டாஸ்மாக் கடையின் அருகில் பார் உள்ளபோதும், சிலையை சுற்றி மதுபிரியர்கள் மது அருந்துவது வாடிக்கையாகவே இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.