பொதுமக்கள் அவதி

Update: 2025-07-20 08:26 GMT

திருவள்ளூர் மாவட்டம், புதிய எருமைவெட்டிபாளையம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்களுக்கான ஒரு ரேஷன் கடை பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் அதிகாலை முதல் விஷ பூச்சிகள் படையெடுக்கும் அபாயநிலை உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் கட்டிடத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்