விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் பெரிய வள்ளிக்குளம் 5-வது வார்டில் புதர்மண்டி காணப்படுவதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், முதியோர்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். குறிப்பாக பாம்புகளின் ஊடுருவல் அதிகமாக காணப்படுகிறது. எனவே அசாம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பாக இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?