மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஊராட்சி அபிஷேகககட்டளை கிராமத்தில் மேற்கு பக்கத்தில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இது பொதுமக்களுக்கு மிகுந்த பயன்பாடாக இருக்கிறது .இந்த நிலையில் இந்த குடிநீர் குழாய் பழுதடைந்து மோசமாக உள்ளது. இந்த பகுதியில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து , குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மயிலாடுதுறை