காரைக்கால் கிதர்பள்ளி வீதி - முஸ்தபா கமால் வீதி சந்திப்பில் சாக்கடை கால்வாய் மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப் சேதமடைந்து காணப்படுகிறது. அந்த வழியாக பொதுமக்கள் நடந்து சென்றால் சிலாப் உடைந்து சாக்கடை கால்வாய்க்குள் விழும் அபாயம் உள்ளது. விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு சாக்கடை கால்வாய் மீது போடப்பட்டுள்ள சிலாப்பை சரி செய்ய வேண்டும்.