பூட்டிக்கிடக்கும் அங்கன்வாடி மையம்

Update: 2023-11-05 15:48 GMT

பூட்டிக்கிடக்கும் அங்கன்வாடி மையம்

அவினாசி அருகே செம்பியநல்லூர் ஊராட்சி கந்தம்பாளையத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்தனர். இந்த மையம் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக பூட்டி இருப்பதாக பொதுமக்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலரிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலரிடம் கேட்டால் உரிய பதில் அளிப்பதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


லிங்கேஸ்வரன்,கந்தம்பாளையம்

78876 57653

மேலும் செய்திகள்

குப்பைமேடு