வான்பார்க்கும் மின்விளக்கு

Update: 2026-08-02 12:14 GMT

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் பேருந்து நிலையம் புரனமைக்கப்படுகிறது. இதற்காக புழல் ஏரிக்கரை அருகில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டது. இங்கு இருக்கும் தெருவிளக்குகள் ஒன்று கூட எரியவில்லை.‌ எரிகிற ஒரு விளக்கும் வானத்தை நோக்கி எரிந்து கொண்டிருக்கிறது. ‌எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்