சங்கராபுரம் அடுத்த நெடுமானூர் காலனி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் எதிரே மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உயிர்சேதம் ஏதும் ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.