திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பெரிய களக்காட்டூர் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இரவு நேரங்களில் மர்ம நபர்கள் பள்ளிக்குள் புகுந்து, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். மேலும் சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.