சென்னை கொளத்தூர், கஸ்தூரி 3-வது தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள மின்பெட்டி ஒன்று மிகவும் ஆபத்தான வகையில் உள்ளது. அதன் கதவுகள் உடைந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.