சென்னை, மூர்மார்கெட் அல்லி குளம், வணிக வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மழைநீர் கால்வாய் உடைப்பு ஏற்பட்டது. மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கசிந்து 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கடுமையான துர்நாற்றம் வீசுவது மட்டுமில்லாமல் கொசுக்கள் உற்பத்தியாகி இரவு நேரங்களில் அப்பகுதி மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.