செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஓரத்தி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் நேற்று முழு நேரமும் பூட்டிய நிலையிலேயே இருந்தது. இதனால் அலுவலகத்தில் வந்திருந்த பொதுமக்கள் காலை முதல் மாலை வரை காத்திருந்து பலனில்லாமல் திரும்பி சென்றனர். இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் சம்பந்தபட்ட நபரின் தொலைபேசி எண்ணை பதிவிட்டால் மக்கள் ஏமாற்றமடைந்து செல்லும் நிகழ்வுகளை தடுக்கலாம்.