ராட்சத குழாய்களால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-08-08 15:16 GMT
பெங்களூரு லால்பாக் பூங்கா 4-வது கேட் பகுதி அருகே நடைபாதை உள்ளது. அந்த நடைபாதை தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும், அந்த நடைபாைதயின் கீழ் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக அங்கு ராட்சத சிமெண்டு குழாய்கள் போடப்பட்டுள்ளன. ஆனால் பணி மந்தமாக நடப்பதால் சிமெண்டு குழாய்கள் பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ளது. மேலும் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைகின்றனர். அதிவேகமாக வரும் வாகனங்கள் ராட்சத குழாயில் மோதும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்