பூந்தமல்லி அடுத்த வரதராஜபுரம் பகுதியில் உள்ள பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் நியாயவிலை கடை செயல்படுகிறது. இந்த கட்டிடம் கட்டி 54 ஆண்டுகள் ஆகிவிட்டதால் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் மழை காலங்களில் மழைநீர் கசிவதாலும், இப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப பொருட்களை சேமித்து வைக்க இட வசதி இல்லாமலும் உள்ளது. மக்கள் நலன் கருதி புதிய ரேஷன் கடையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.