சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரி அருகே அமைந்துள்ள தாயப்ப முதலி தெருவில் உள்ள ஒரு மின்சார பெட்டி திறந்து ஒயர்கள் வெளியே தெரிந்து பொதுமக்களுக்கு மிகவும் ஆபத்தானநிலையில் உள்ளது. மின்விபத்துகள் ஏற்பட்டால்தான் இவைகள் சரிசெய்யப்படுமா? என்பது பொதுமக்களின் குமுறலாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களின் சிரமத்தை போக்கிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.