சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் தொழில் பகுதியின் சாலையில் இருபுறமும் குப்பைகள் நிறைந்து பார்க்கவே சகிக்க முடியாமல் சுகாதார சீர்கேடாகி கிடக்கிறது. அதே சாலையில் மாடுகளும் தங்கி தங்களது கழிவுகளை இட்டுசெல்வதால் அந்த பகுதியை அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் அந்த பகுதியை ஆய்வு செய்து தேங்கியுள்ள குப்பைகள், கழிவுகள் அகற்றப்பட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.