பெரம்பலூர் மாவட்டம் குரும்பாபாளையத்தில் மருதையாறு உள்ளது. இந்த ஆறு மூலம் சுற்றுப்புர விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்நிலையில் இப்பகுதி பொதுமக்கள் மருதையாற்றில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் ஆறு குப்பைக் கூளமாக மாறிவருகிறது. எனவே மருதையாற்றில் உள்ள குப்பைகளை அகற்றி ஆற்றை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.