கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், வேலாயுதம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பைகள், பஞ்சுகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை கொட்டப்படுகின்றன. இங்கு கிடக்கும் பஞ்சுகள் காற்றில் பறந்து சாலையின் நடுவே வந்து கிடக்கின்றன. மேலும் பனி பெய்வதால், கழிவுகள் மீது ஈரம்பட்டு தூர்நாற்றம் வீசுகிறது. வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் இந்த தூர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே இந்த குப்பைக் கழிவுகளை உடனே அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.