சுகாதார சீர்கேடு

Update: 2025-12-28 15:15 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே கணபதிபுரம் கிராமத்தில் இருந்து கந்தர்வகோட்டை செல்லும் சாலை அருகே ஆதிதிராவிடர் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புகளில் வசிப்போர் பாலித்தீன் கவர், உடைந்த கண்ணாடிகள் உள்ளிட்ட குப்பைகளை சாலையோரத்தில் கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்