கால்வாயில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2025-12-28 12:48 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மலையம்பாக்கம் பகுதியில் பொதுப்பணிதுறைக்கு சொந்தமான கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அதிகமான குப்பைகள் வீசப்படுகின்றன. மேலும் கழிவுநீர் கலக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதி சுகாதாரமற்று நோய்த்தொற்று ஏற்படும் அபாய நிலையில் உள்ளது. இங்கு துர்நாற்றம் அதிகமாக வீசுவதால் அருகில் உள்ள குடியிறுப்புகளில் மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியா நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்